இரஜினியின் ‘பஞ்ச்’ வசனங்கள் கார்ப்பரேட்களிலும், நிர்வாகத்திலும் எவ்வளவு பயன்படுகின்றன என இராஜ் டிவி, கிழக்குப் பதிப்பக புத்தகமொன்றை அடிப்படையாகக் கொண்டு ஒரு நிகழ்ச்சி செய்து வருகின்றது.யோசித்துப் பார்க்கையில், சூப்பர் ஸ்டார் இரஜினிகாந்தால் பிரபலமான வசனங்களை விட, வடிவேலு முதலான நகைச்சுவை நடிகர்களால் பிரபலமான வசனங்கள்தாம் தற்போதைய கார்ப்பரேட் கலாச்சாரத்தை யதார்த்தமாக, எள்ளலுடன் பிரதிபலிப்பதாகத் தோன்றுகிறது. அவற்றை வைத்து நாமும் கொஞ்ச நேரம் தாலியறுத்தால் என்ன..? என்று தோன்றியதால், சயன நேரத்திற்கு முன்னான அயர்ந்த நேரத்தில் சிந்தித்தவை இவை. ஒரு சிலவற்றைப் பார்ப்போம்!
இது சம்பந்தமான ஒரு கழுதை, நாய் கதை கூட உண்டு. நாயின் வேலையையெல்லாம், கழுதை இழுத்துப் போட்டுக் கொண்டு செய்யும். ஒரு கட்டத்தில், கழுதை அப்படிச் செய்து செய்து செத்துப் போகும். அக்கழுதையின் இடத்திற்கு, மீண்டும் ஒரு கழுதை நியமிக்கப் படும். நாயானது, தனக்கு ஒதுக்கப் பட்ட வேலையை மட்டும் சுகமாகச் செய்து கொண்டிருக்கும் என்பது போல அக்கதை நீளும். ஒரு புதிய ப்ராஜெக்ட்டையோ அல்லது இதுவரை யாரும் தொட்டிராத இம்சையான வேலையையோ, உங்கள் கைகளில் திணிக்கும் போது, உங்கள் மேனேஜர் தன்னம்பிக்கையூட்டும் விதமாக, Yes man! y u r worrying...? U can do this task. Honestly Saying, U only can do this. என்பார். அதிலும் அந்த 'ஒன்லி' என்ற வார்த்தையை மட்டும் அழுத்தி உச்சரிக்கும் போது, உங்களுக்கு மேற்சொன்ன வின்னர் பட வசனம் நினைவுக்கு வர வேண்டும்.
மேலும், ஒருவர் அதிலும் குறிப்பாக நம் மேனேஜர், நம்மைப் புகழும் போது ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அந்தப் புகழ்ச்சி நிஜமான ஒன்றா அல்லது நம்மிடம் அதிக வேலையைக் கறக்க போடப்படும் தூபமா என அறிந்து கொள்ளும் அறிவு இருக்கவேண்டும். இது பற்றியதொரு எச்சரிக்கை உணர்வைக் கொடுக்கும் வசனம்தான் ”இப்பிடி உசுப்பேத்தி, உசுப்பேத்தியே உடம்பை இரணகளமாக்கிருவாய்ங்களே!”
அலுவலகச் சூழலில், சந்திப்புகள் (மீட்டிங்) இன்றியமையாதவை. அதிலும் இன்டர்டிபார்ட்மென்ட் மீட்டிங்-களில் குதூகலத்திற்குக் குறைவேயிருக்காது! சமயங்களில், குழாயடி குடுமி பிடி சண்டைகளுக்கு நிகரான சண்டைகளும் நிகழும். அம்மாதிரியான, இரத்தக் களரிகள் முடிந்து, கான்ஃப்ரன்ஸ் ஹாலை விட்டு வெளியேறும் போது, ஏதாவதொரு ஜீவன் மட்டும், தனக்குத் தானே பேசிக் கொண்டு வரும். அந்த ஜீவனின் மனநிலை, 'தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்' என்பதாக இருக்கும். அம்மாதிரியான சமயங்களில், நினைவூட்டுவதற்காக நமக்கு அருளப்பட்ட பொன்மொழிதான் ”சண்டையில கிழியாத சட்டை எங்கே இருக்கு..?" என்பதாகும்.
அலுவலகத்தில் புதிதாக அறுக்க வந்த ஆடு (Newly Joined) அல்லது ஆடுகளுக்கு, நம் கம்பெனியின் அதி தீவிர சூர பராக்ரமங்களைச் சொல்வார்கள் அல்லவா..? ஒரு கப் காஃபியுடன், வெகு சிநேகத் தோரணையுடன் நடக்கும் சந்திப்பு இது. இப்படியான சந்திப்பில், கம்பெனியின் ஒவ்வொரு சாதனையையும் சொல்லும் போது, உள்ளுக்குள் ஓட வேண்டிய பஞ்ச் லைன் இது. தோராயமாக, ஆறு மாதங்கள் சென்றபின், அந்த ஆடுகள் தாமே, “இது டம்மி ப்பீஸ் மாப்ள” என்ற பஞ்ச் டயலாக்கிற்கு அர்த்தம் கண்டிருப்பார்கள் என்பது சொல்லத் தகாத ஒன்று.
குறிப்பாக, அப்ரைசல் முடிவுகளுக்கான பஞ்ச் இது. என்றாவது ஒரு நாள் ஏசு கூட வந்து விடக் கூடும். ஆனால், அப்ரைசலில் மட்டும் நீங்கள் எதிர்பார்த்த ரிவ்யூ கிடைக்கவே கிடைக்காது. அம்மாதிரியான தருணங்களில் தன்னம்பிக்கை ஊட்டும் விதமாக, அருளப்பட்ட வசனமிது. ’இன்னிக்கில்லைன்னா நாளைக்கு மச்சி’ என்று போய்க் கொண்டே இருக்கலாம்.
செமினார்களுக்கான பஞ்ச் டயலாக். தப்பித் தவறி எப்போதாவது ’ஆன்சைட்’ செல்வீர்கள். அங்கு ஜாலியாக ஓபி அடித்து விட்டு, ஆஃபீஸ் வந்தால், ரிப்போர்ட் கொடுக்கச் சொல்லி, கடுப்பேற்றுவார்கள் அல்லவா..? அம்மாதிரியான சமயங்களில், நீங்கள் சென்று வந்த ’சைட் ப்ராகரஸ்’ பற்றி பாதி மட்டுமே தெரிந்த விஷயங்களைச் சொல்வதை விட, அவற்றை முற்றிலும் தவிர்த்து விடுவது நல்லது. இல்லையெனில், நம்மைப் பழிவாங்குவதற்காகவே அலுவலகத்தில் உள்ள சில லகுடபாண்டிகளிடம் அசடு வழிய வேண்டி வரும். அதுதான் “அடுத்த வரி தெரியலைன்னா அப்ரூட்டா கட் பண்ணு.
” வாடா,வாடா...நீ தெருவுக்கு வாடா..! வாடா,வாடா...நீ வீட்டுக்கு வாடா..! - வடிவேலு . (படம்: நகரம்)
வாடிக்கையாளர், (க்ளையண்ட்) நம்மை, பார்க்க வருகையில், அலுவலகத்தை மணப்பெண் போல அலங்காரம் செய்து, அவர்களை ஒரு வழியாக ஏமாற்றி, ப்ராஜெக்ட் வாங்கிய பின், நடப்பதைச் சொல்லும் ’பஞ்ச்’ இது! ப்ராஜெக்ட்டில், முதலில் ஒரு தவறு வரும். அதைச் சரி செய்ய, ஒரு காலக்கெடு தருவார்கள். அந்த நிர்ணயித்த காலத்திற்குள், எப்படியும் அத் தவறைச் சரி செய்ய முடியாது. அடுத்த கெடு! அப்போதும் செய்ய முடியாது! கெடு! முடியாது! இப்படியாக, டெட்லைன் ஒன்றை நிர்ணயித்து, அந்த டெட்லைனும் டெட் ஆன பின் செய்து முடித்து, க்ளையண்ட்டிடம், சரணாகதி அடைவோமே,. அந்தச் சூழலுக்கு பொருத்தமான வடிவேலு பஞ்ச் இது!
வல்லவனுக்கு வாய்ச்சதெல்லாம் ஆயுதந்தான்! - வடிவேலு. (படம்-சீனாதானா001)
கோழி இறகை வைத்து, வீட்டுக் கதவைத் திற்க்கும் காட்சியில்தான் இந்த பஞ்ச் வசனத்தைச் சொல்வார் வடிவேலு. அலுவலகத்திலும் இம்மாதிரியான வேலைகள் நிச்சயம் இருக்கும். உதாரணமாக, உங்களுக்கான ’இன்புட் டேட்டாஸ்’ வரவில்லையென்றலோ, மற்ற ’டிபார்ட்மெண்ட்டின் ’கன்கரன்ஸ் டீடெய்ல்ஸ்’ வரவில்லையென்றாலோ மனம் தளர்ந்து வேலை செய்யாமல் இருக்கக் கூடாது. இதற்கு, முந்தைய ’ப்ராஜெக்ட்டில்’ கொடுத்த விவரங்களுடன் தற்போதைய ’டாஸ்க்கின்’ விவரங்களை ஒப்பிட்டு சமாளிக்கத் தெரிந்திருக்க வேண்டும். அதுதான், வல்லவனுக்கு வாய்த்ததெல்லாம் ஆயுதம்.
குறிப்பிட்டுச் சொல்ல முடியாமல், எல்லா இடஙகளிலும் பயன்படும் டயலாக்/சமிக்ஞை இவை! மேனேஜர் உங்களைப் புரியாமல்/உங்களுக்குப் புரியாமல் பேசிக் கொண்டிருந்தாலோ, உங்கள் மீதான ஓவர் கான்ஃபிடன்ஸில் மற்ற எல்லோருக்கும் டோஸ் விட்டாலோ, (இது சமயங்களில் தலைகீழாகவும் நடக்கலாம்), ரிப்போர்ட்கள் ‘ப்ராமிக்’ கல்வெட்டுகளைப் போல ஒன்றுமே புரியாமல் விழிக்கும் போதோ, விடுமுறைகளுக்காக மேனேஜர் கேபினுக்குள் செல்லும் போதோ என பல இடங்களில் பயன்படுபவை. முன்பே சொன்னது போல, மேற்கூறியவை அனைத்தும் சில சாம்பிள்கள்தாம்! யோசித்துப் பார்த்தால், இம்மாதிரியாக பல சிக்கக்கூடும்.சரிதானே! -♠ராஜூ♠
”இப்பிடி உசுப்பேத்தி, உசுப்பேத்தியே உடம்பை இரணகளமாக்கிருவாய்ங்களே"- வடிவேலு . (படம்: வின்னர்)
”சண்டையில கிழியாத சட்டை எங்கே இருக்கு..?- வடிவேலு .
(படம்-வின்னர்)
அலுவலகச் சூழலில், சந்திப்புகள் (மீட்டிங்) இன்றியமையாதவை. அதிலும் இன்டர்டிபார்ட்மென்ட் மீட்டிங்-களில் குதூகலத்திற்குக் குறைவேயிருக்காது! சமயங்களில், குழாயடி குடுமி பிடி சண்டைகளுக்கு நிகரான சண்டைகளும் நிகழும். அம்மாதிரியான, இரத்தக் களரிகள் முடிந்து, கான்ஃப்ரன்ஸ் ஹாலை விட்டு வெளியேறும் போது, ஏதாவதொரு ஜீவன் மட்டும், தனக்குத் தானே பேசிக் கொண்டு வரும். அந்த ஜீவனின் மனநிலை, 'தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்' என்பதாக இருக்கும். அம்மாதிரியான சமயங்களில், நினைவூட்டுவதற்காக நமக்கு அருளப்பட்ட பொன்மொழிதான் ”சண்டையில கிழியாத சட்டை எங்கே இருக்கு..?" என்பதாகும்.
"இது இரத்த பூமி. இங்க குழாயத் தொறந்த தண்ணீ வராது. இரத்தம்தான் வரும்."– வடிவேலு (படம்-வின்னர்)
அலுவலகத்தில் புதிதாக அறுக்க வந்த ஆடு (Newly Joined) அல்லது ஆடுகளுக்கு, நம் கம்பெனியின் அதி தீவிர சூர பராக்ரமங்களைச் சொல்வார்கள் அல்லவா..? ஒரு கப் காஃபியுடன், வெகு சிநேகத் தோரணையுடன் நடக்கும் சந்திப்பு இது. இப்படியான சந்திப்பில், கம்பெனியின் ஒவ்வொரு சாதனையையும் சொல்லும் போது, உள்ளுக்குள் ஓட வேண்டிய பஞ்ச் லைன் இது. தோராயமாக, ஆறு மாதங்கள் சென்றபின், அந்த ஆடுகள் தாமே, “இது டம்மி ப்பீஸ் மாப்ள” என்ற பஞ்ச் டயலாக்கிற்கு அர்த்தம் கண்டிருப்பார்கள் என்பது சொல்லத் தகாத ஒன்று.
திரிஷா இல்லைன்னா திவ்யா – வடிவேலு (படம்-தலைநகரம்)
குறிப்பாக, அப்ரைசல் முடிவுகளுக்கான பஞ்ச் இது. என்றாவது ஒரு நாள் ஏசு கூட வந்து விடக் கூடும். ஆனால், அப்ரைசலில் மட்டும் நீங்கள் எதிர்பார்த்த ரிவ்யூ கிடைக்கவே கிடைக்காது. அம்மாதிரியான தருணங்களில் தன்னம்பிக்கை ஊட்டும் விதமாக, அருளப்பட்ட வசனமிது. ’இன்னிக்கில்லைன்னா நாளைக்கு மச்சி’ என்று போய்க் கொண்டே இருக்கலாம்.
"அடுத்த வரி தெரியலைன்னா அப்ரூட்டா கட் பண்ணு!" – வடிவேலு. (படம்-இங்கிலீஸ்காரன்)
செமினார்களுக்கான பஞ்ச் டயலாக். தப்பித் தவறி எப்போதாவது ’ஆன்சைட்’ செல்வீர்கள். அங்கு ஜாலியாக ஓபி அடித்து விட்டு, ஆஃபீஸ் வந்தால், ரிப்போர்ட் கொடுக்கச் சொல்லி, கடுப்பேற்றுவார்கள் அல்லவா..? அம்மாதிரியான சமயங்களில், நீங்கள் சென்று வந்த ’சைட் ப்ராகரஸ்’ பற்றி பாதி மட்டுமே தெரிந்த விஷயங்களைச் சொல்வதை விட, அவற்றை முற்றிலும் தவிர்த்து விடுவது நல்லது. இல்லையெனில், நம்மைப் பழிவாங்குவதற்காகவே அலுவலகத்தில் உள்ள சில லகுடபாண்டிகளிடம் அசடு வழிய வேண்டி வரும். அதுதான் “அடுத்த வரி தெரியலைன்னா அப்ரூட்டா கட் பண்ணு.
” வாடா,வாடா...நீ தெருவுக்கு வாடா..! வாடா,வாடா...நீ வீட்டுக்கு வாடா..! - வடிவேலு . (படம்: நகரம்)
வாடிக்கையாளர், (க்ளையண்ட்) நம்மை, பார்க்க வருகையில், அலுவலகத்தை மணப்பெண் போல அலங்காரம் செய்து, அவர்களை ஒரு வழியாக ஏமாற்றி, ப்ராஜெக்ட் வாங்கிய பின், நடப்பதைச் சொல்லும் ’பஞ்ச்’ இது! ப்ராஜெக்ட்டில், முதலில் ஒரு தவறு வரும். அதைச் சரி செய்ய, ஒரு காலக்கெடு தருவார்கள். அந்த நிர்ணயித்த காலத்திற்குள், எப்படியும் அத் தவறைச் சரி செய்ய முடியாது. அடுத்த கெடு! அப்போதும் செய்ய முடியாது! கெடு! முடியாது! இப்படியாக, டெட்லைன் ஒன்றை நிர்ணயித்து, அந்த டெட்லைனும் டெட் ஆன பின் செய்து முடித்து, க்ளையண்ட்டிடம், சரணாகதி அடைவோமே,. அந்தச் சூழலுக்கு பொருத்தமான வடிவேலு பஞ்ச் இது!
வல்லவனுக்கு வாய்ச்சதெல்லாம் ஆயுதந்தான்! - வடிவேலு. (படம்-சீனாதானா001)
கோழி இறகை வைத்து, வீட்டுக் கதவைத் திற்க்கும் காட்சியில்தான் இந்த பஞ்ச் வசனத்தைச் சொல்வார் வடிவேலு. அலுவலகத்திலும் இம்மாதிரியான வேலைகள் நிச்சயம் இருக்கும். உதாரணமாக, உங்களுக்கான ’இன்புட் டேட்டாஸ்’ வரவில்லையென்றலோ, மற்ற ’டிபார்ட்மெண்ட்டின் ’கன்கரன்ஸ் டீடெய்ல்ஸ்’ வரவில்லையென்றாலோ மனம் தளர்ந்து வேலை செய்யாமல் இருக்கக் கூடாது. இதற்கு, முந்தைய ’ப்ராஜெக்ட்டில்’ கொடுத்த விவரங்களுடன் தற்போதைய ’டாஸ்க்கின்’ விவரங்களை ஒப்பிட்டு சமாளிக்கத் தெரிந்திருக்க வேண்டும். அதுதான், வல்லவனுக்கு வாய்த்ததெல்லாம் ஆயுதம்.
ம்ம்ம்ம்ம்முடியல, அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்! –வடிவேலு. (பல படங்களில்)